கோவை, அக்.31: கோவை சுங்கம் பகுதியில் உள்ள பிஷப் அம்புரோஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கல்லூரி மாணவர்கள் மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான தன்னம்பிக்கை மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பாரதி கல்லூரியின் செயலாளரும், பாரதியார் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினருமான டாக்டர் ஆர்.டி.இ. ஜெரோம் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் ஐ. மரிய யேசு ராஜா வரவேற்றார். இதில் முன்னாள் காவல்துறை மாவட்டக் கண்காணிப்பாளர் முனைவர் கலியமூர்த்தி சிறப்புரையாற்றினார்.

தொடர்ந்து பிளஸ் 2 மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நேவிகேட் யுவர் பேஷன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கலைமணி சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் பிஷப் அம்ப்ரோஸ் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 66 ஆசிரியர்கள், 1,500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி துணை முதல்வர் பவுலினா வசந்தி, தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் குளோரியா, துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், என்.எஸ்.எஸ்., என்.சி.சி. மாணவர்கள் மற்றும் கல்லூரி தன்னார்வலர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.