கோவை, அக்.30: கோவையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்பட்டு வரும் உரிமையியல் நீதிமன்றங்களை இடமாற்றம் செய்யும் முடிவுக்கு கோவை வழக்கறிஞர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இன்று நடைபெற்ற சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில் வழக்கறிஞர்கள் சங்கத்துடன் ஆலோசிக்காமலும், முன் அறிவிப்பு மற்றும் போதிய கால அவகாசம் வழங்காமலும் நீதிமன்றங்களை இடமாற்றம் செய்துள்ளனர். இந்நிலையில் இடமாற்ற நடவடிக்கைகளை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர். இந்தக் கோரிக்கையை நிர்வாகம் ஏற்காவிட்டால், நவம்பர் 4-ஆம் தேதி வரை கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்கறிஞர்கள் நீதிமன்றப் பணிகளில் இருந்து விலகியிருக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.