கோவை எஸ்ஐஎச்எஸ் காலனி இந்திரா நகர் பகுதியில், சைக்கிளில் சென்ற சிறுவனின் குறுக்கே திடீரென பாம்பு வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவன், சைக்கிளில் இருந்து தாவி குதித்து அலறியபடி ஓடினான்.
இதில், சைக்கிளின் முன்சக்கரம் பாம்பின் மீது ஏறி இறங்கியபோதும், பாம்பு உயிருடன் தப்பி வேகமாக அங்கிருந்து சென்றது. இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.
அப்பகுதியில் புதர்கள் அதிகமாக உள்ளதால், பாம்பு உள்ளிட்ட ஊர்வனங்கள் அடிக்கடி தென்படுவதாக கூறப்படுகிறது.