Google இன்றைய தலைமுறையினரின் அங்கமாக மாறிவிட்டது. எதற்கெடுத்தாலும் Google. கேள்விகள் தொடங்கி, சந்தேகங்கள், தீர்வுகள் என பல்வேறு நிலைகளில் googleஐ தேடும் நாம் மருத்துவ உதவிக்கும், ஆலோசனைக்கும் கூட கூகுளை தேடும் போக்கு அதிகரித்து வருகிறது.
இது சரியா தவறா என ஜெனரல் சர்ஜன் டாக்டர் குகன் கூறியதாவது:
இன்றைய காலகட்டத்தில் ஒரு தலைவலி, வயிற்று வலி அல்லது வேறு ஆரம்ப நோய்கள் ஏற்பட்டால் பொதுவாக Google-லை தான் தேடுகிறார்கள். டாக்டரை நம்புவதை விட கூகுளை தான் நம்புகிறார்கள். ஆனால் சரியா தவறா எனப் பார்த்தால் தவறுதான். கூகுள் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கேட்கும் கேள்விக்கு பகிரும் வார்த்தைகளை கீ வேர்டாக எடுத்துக் கொள்ளும். அதை வைத்து சொல்லும். ஆனால் அது சரியாக இருக்கும் என்பதை சொல்ல முடியாது. கூகுள் கொடுக்கும் தகவல்களை நாம் உறுதி செய்ய வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ தளங்களில் இருந்து தகவலை தருகிறதா என்பதை நாம் பரிசோதிக்க வேண்டும். ஒரு பிரச்சனை வருகிறது என்றால் 24 மணி நேரம் வரை அது தொடர்கிறதா என பார்க்க வேண்டும். அதை மீறி இருந்தால் மருத்துவரை தான் அணுக வேண்டும். அதுதான் நிரந்தர தீர்வு. இவ்வாறு கூறினார்.