ஆவடியில் கடந்த 21ம் தேதி முதல் நடந்து வரும் மாநில அளவிலான காவல் துறை பணித்திறன் மற்றும் மோப்ப நாய் போட்டிகளில், கோவை மாநகர போலீசார் சிறப்பிடம் பெற்றனர்.
போதைப்பொருள் கண்டறியும் பிரிவில் மோப்ப நாய் மதனா, அதன் கையாளுநர் தலைமைக் காவலர் அசோக்குமார் 2ம் பரிசு பெற்றார். வெடிபொருள் கண்டறியும் பிரிவில் மோப்ப நாய் மலர், அதன் கையாளுநர் தலைமைக் காவலர் செந்தில்குமார் 2ம் பரிசு பெற்றார். வெற்றி பெற்றவர்களை போலீஸ் கமிஷனர் (பொ) ரம்யாபாரதி பாராட்டினார்.