கோவை மருதமலை வனப்பகுதியை ஒட்டியுள்ள பாரதியார் பல்கலைக்கழக வளாகத்திற்குள் காட்டுப்பன்றி, மான், யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அவ்வப்போது நுழைந்து வருகின்றன.
கோடை மழை குறைந்ததால் வனப்பகுதியில் உணவு, தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், வனவிலங்குகள் இரவு நேரங்களில் பல்கலைக்கழக வளாகத்திற்குள் வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று இரவு பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்த காட்டுப்பன்றி, பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்டவற்றை உணவு தேடி கிளறிய காட்சிகள் பதிவாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்கள், காவலாளிகள் மற்றும் பணியாளர்கள் இரவு நேரங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.