கோவை சுந்தராபுரம் அஷ்டலட்சுமி நகர் பகுதியில் சைக்கிளில் சென்றவரை தெருநாய்கள் கூட்டமாக துரத்தும் சி.சி.டி.வி. காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
நேற்று மாலை சைக்கிளில் சென்ற நபரை தெருநாய்கள் ஆக்ரோஷமாக துரத்த, அவர் வேகமாக சைக்கிளை மிதித்து தப்பிய காட்சிகள் பதிவாகியுள்ளன.
இதே பகுதியில் 8 வயது சிறுமியையும் தெருநாய்கள் துரத்தியதாக சமூக ஆர்வலர் நூர் அகமது தெரிவித்துள்ளார். நாய்களிடம் இருந்து தப்பிக்க சிறுமி இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றதால் விபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.
தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மாநகராட்சி நிர்வாகம் இனியும் தாமதிக்காமல் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நூர் அகமது வலியுறுத்தியுள்ளார்.