கோவை பட்டணம் எல் & டி பைபாஸ் பகுதியில் உள்ள மாத்தர் தேய் இண்டர்நேஷனல் பள்ளியின் 10-ம் ஆண்டு விழாவையொட்டி, விளையாட்டுப் போட்டிகளில் சாதித்த மாணவர்களுக்கான பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
தாளாளர் அருட்தந்தை ஃபேபின் நீலங்காவில், உதவித் தாளாளர் அருட்தந்தை சச்சின் காலிங்கல் ஆகியோர் மாணவர்களுக்கு விருதுகள், பதக்கங்களை வழங்கினர். ஸ்கேட்டிங், வட்டு எறிதல், கபடி உள்ளிட்ட போட்டிகளில் மாணவர்கள் மண்டல மற்றும் தேசிய அளவில் சாதனை படைத்துள்ளனர்.
இதில் ஃபெர்டினோ ஜோசப் ஸ்கேட்டிங்கில் தங்கம், வெள்ளிப் பதக்கம் வென்று தேசிய போட்டிக்கு தேர்வானார். அஞ்சனா வட்டு எறிதலில் மண்டல சாதனையுடன் முதலிடம் பிடித்தார். செந்தூரன், தருண் ஆதீஷ் ஆகியோர் கபடியில் மண்டல அளவில் 3-ம் இடமும், பிரணேஷ் தேசிய கபடி போட்டியில் 3-ம் இடமும் பெற்றனர்.