கோவையில் கிழக்கு மாவட்ட லட்சிய ஜனநாயக கட்சியின் சார்பில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முன்னதாக புதுச்சேரி காமராஜர் தொகுதி எம்.எல்.ஏ., ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் ஆணைக்கிணங்கவும், நெல்லை ஜீவா அறிவுறுத்தலின்படியும், மாநில முதன்மைச் செயலாளர் கோவை கார்த்திகேயன் மற்றும் கோவை கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில் முருகன் ஆலோசனையின்படியும் மாவட்ட நிர்வாகிகள் காந்தியின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்றனர்.