By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
westghatsmedia.com
  • 🇺🇸 English
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
    • வணிகம்
    • குற்றம்
    • சமூகம்
      • பெண்கள்
      • குழந்தைகள்
      • இளைஞர்கள்
      • வேலைவாய்ப்பு
    • மருத்துவம்
    • விவசாயம்
    • வானிலை
    • லைப் ஸ்டைல்
    • பேசும் படங்கள்
    • ஸ்பெஷல் ஸ்டோரி
    • நேர்காணல்
    • பாட்காஸ்ட்
    • சட்டம்
    • பாராளுமன்றம்
    • மீம்ஸ்
Reading: சென்னையில் புதிய மெட்ரோ சேவை தொடக்கம்… கோவையின் கனவு நனவாகுமா?
Share
westghatsmedia.com
  • 🇺🇸 English
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
  • Home
  • தமிழ்நாடு
  • உலகம்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
  • தொழில்நுட்பம்
  • மற்றவை
    • வணிகம்
    • குற்றம்
    • சமூகம்
    • மருத்துவம்
    • விவசாயம்
    • வானிலை
    • லைப் ஸ்டைல்
    • பேசும் படங்கள்
    • ஸ்பெஷல் ஸ்டோரி
    • நேர்காணல்
    • பாட்காஸ்ட்
    • சட்டம்
    • பாராளுமன்றம்
    • மீம்ஸ்
westghatsmedia.com > Blog > அரசியல் > சென்னையில் புதிய மெட்ரோ சேவை தொடக்கம்… கோவையின் கனவு நனவாகுமா?
அரசியல்கோவைஸ்பெஷல் ஸ்டோரி

சென்னையில் புதிய மெட்ரோ சேவை தொடக்கம்… கோவையின் கனவு நனவாகுமா?

மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களை மறுபரிசீலனை செய்யுமாறு பிரதமருக்கு முதல்வர் விஜய் கோரிக்கை வைத்துள்ளார்.

West Ghats
Last updated: October 11, 2026 7:01 pm
West Ghats
Published: October 11, 2026
Share
NEWS EDITOR: JERALD ARULDAS
Highlights
  • கோவையின் போக்குவரத்துத் தேவை மற்றும் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.
  • Facebook
  • Twitter
  • WhatsApp
  • Telegram
  • Copy Link

கோவையில் மெட்ரோ ரயில் என்பது காலத்தின் கட்டாயம். இதை கருத்தில் கொண்டு முந்தைய திமுக அரசு 3 முறை திட்ட அறிக்கை அளித்தும் அதை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் திருப்பி அனுப்பியுள்ளது.

கோவை, மதுரை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என 2021 சட்டப்பேரவை தேர்தலின்போது திமுக அறிவித்தது. ஆட்சிக்கு வந்தபின்பு, ரூ.10,740 கோடி மதிப்பில் கோவை மெட்ரோ ரயிலுக்கான விரிவான திட்ட அறிக்கை 655 பக்கங்களில் தயார் செய்து, நிதி மற்றும் ஒப்புதல் கோரி மத்திய அரசிடம் 2024 மே மாதத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதை திருப்பி அனுப்பிய மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம், மாற்றுத்திட்டங்கள் மற்றும் போக்குவரத்து வசதிகளுக்கான ஆய்வு அறிக்கையுடன் சேர்த்து ஒருங்கிணைந்த திட்டத்தை அனுப்புமாறு தமிழக அரசை கேட்டுக்கொண்டது.

பின்னர், மத்திய அரசு கேட்ட தகவல்களுடன் 2025-ஆம் ஆண்டு நவம்பரில் மீண்டும் அறிக்கை அனுப்பியபோது, கோவையின் மக்கள் தொகை குறைவு, திட்டச்செலவு அதிகம், பயண நேரம் குறையாது, சாலை அகலங்கள் குறைவு என பல காரணங்களை கூறி திருப்பி அனுப்பியது.

இதையடுத்து, 3-வது முறையாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் உரிய விளக்கம் அளித்து, 2026 மே 22ம் தேதியன்று திட்ட அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பியது. ஆனால், அதே பழைய காரணங்களை கூறி, மீண்டும் கடந்த ஜூலை மாதம் திருப்பி அனுப்பியது.

டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களில் மட்டுமல்லாமல், உத்தரப்பிரதேசத்தில் லக்னோ, கான்பூர், மீரட், ஆக்ரா போன்ற 2-ம் நிலை நகரங்களிலும், மகாராஷ்டிராவில் நாக்பூர், புனே மற்றும் குஜராத்தில் அகமதாபாத் போன்ற நகரங்களிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதேபோல கோவையை விட மக்கள் தொகை குறைந்த கொச்சி போன்ற முக்கிய நகரங்களிலும் மெட்ரோ சேவை நடைமுறையில் இருக்கும்போது, கோவைக்கும் அனுமதி வழங்க வேண்டு என கோவை மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டத்தின் கீழ், பூந்தமல்லி-வடபழனி இடையிலான 14.64 கி.மீ தொலைவிலான புதிய மெட்ரோ ரயில் சேவையை திறந்து வைத்தார். இப்படியிருக்க கோவை மக்களின் நீண்ட கால கனவான கோவை மெட்ரோவை பிரதமரின் கவனத்துக்கு முதல்வர் விஜய் கொண்டு செல்ல வேண்டுமென கோவை மக்கள் எதிர்பார்த்தனர். இந்தநிலையில் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களை மறுபரிசீலனை செய்யுமாறு பிரதமருக்கு முதல்வர் விஜய் கோரிக்கை வைத்துள்ளார்.

2011-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட வாதங்களை மறுபரிசீலனை செய்யவும், புதிய மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் தரவுகள் கிடைக்கும்போது அவற்றின் அடிப்படையில் திட்டத்தை மதிப்பிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கோவையின் போக்குவரத்துத் தேவை மற்றும் எதிர்கால வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.

  • Facebook
  • Twitter
  • WhatsApp
  • Telegram
  • Copy Link
கோவை வனப்பகுதியில் தென்பட்ட சிறுத்தைகளின் புகைப்படம் வைரல்
கனமழையால் கோவை குற்றாலம் மூடல்
கோவையில் சைக்கிளின் குறுக்கே வந்த பாம்பு : அலறியடித்து ஓடிய சிறுவன்!
விஜய் பிரதமர் வேட்பாளர்? தேர்தல் நேரத்தில் சொல்கிறேன்: திருமாவளவன் பேட்டி
செண்டை மேளம் முழங்க… புலி ஆட்டம் களைகட்ட… கோவை வீதிகளில் ஓணம் கொண்டாட்டம்!
TAGGED:CHIEFMINISTERCMJOSEPHVIJAYcoimbatoreCOIMBATOREMETROJOSEPHVIJAYMETROMODIPMVIJAYwestghatsWestghatsmedia
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

What's Hot

உஷ்ணம் தாங்காமல் குட்டையில் இறங்கிய காட்டு யானைகள் வீடியோ வைரல்

நூலகமா… அறிவியல் உலகமா? கோவையில் வியக்க வைக்கும் ‘பெரியார் அறிவுலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்

ஓசூரில் ‘ எம்எஸ்எம்இ சங்கமம் கனெக்ட்’: ரூ.2,000 கோடி வர்த்தகம் நடைபெற வாய்ப்பு

கோவையில் ரூ.1.06 கோடி வழிப்பறி: உளுந்தூர்பேட்டையில் சிக்கிய 4 பேர்

குடிமைப் பணித் தேர்வில் சாதிக்க ஒரு வாய்ப்பு! கோவையில் 6 மாத இலவச ஐ.ஏ.எஸ். பயிற்சி

கோவையில் மது வாங்க வந்த இடத்தில் சிக்கிய கள்ளநோட்டுகள்… போலீசில் 5 பேர்!

West Ghats Media

உண்மையின் குரல்! உங்கள் ஊரின் உடனுக்குடனான செய்திகள், உள்ளூர் நிகழ்வுகள் மற்றும் பிரத்யேக தகவல்களை ஒரே இடத்தில் அறிய எங்களை பின்தொடருங்கள்.
செய்திகள்
  • கோவை
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • குற்றம்
  • சட்டம்
மற்றவை
  • வணிகம்
  • வானிலை
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • லைப் ஸ்டைல்
  • சமூகம்
ஸ்பெஷல்ஸ்
  • நேர்காணல்
  • பாட்காஸ்ட்
  • பேசும் படங்கள்
  • மீம்ஸ்
  • வேலைவாய்ப்பு
  • ஸ்பெஷல் ஸ்டோரி
  • About Us
  • Privacy Policy
  • Terms and Conditions
  • Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?