கோவை,அக்.13: பொள்ளாச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட நவமலை மின்வாரியக் குடியிருப்புப் பகுதியின் பின்புறம் உள்ள காப்புக்காட்டில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட யானை உயிரிழந்தது.

நவமலை மின்வாரியப் பணியாளர் குடியிருப்புப் பகுதியிலிருந்து கிடைத்த தகவலின் பேரில், வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று, மிகவும் மோசமான நிலையில் இருந்த யானைக்குத் தீவிர சிகிச்சை அளித்தனர்.

10 மணி நேரத்திற்கும் மேலாகத் தொடர்ந்து சிகிச்சை அளித்தும், யானையைக் காப்பாற்ற முடியவில்லை. இதையடுத்து உயிரிழந்த யானையின் இறப்புக்கான காரணத்தைக் கண்டறிய, யானைகள் இறப்பு தணிக்கை நடைமுறை (EDAF) வழிகாட்டு நெறிமுறைகளின்படி உடற்கூராய்வு மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.