கோவை கொடிசியா அருகே உள்ள இஸ்கான் ஜெகன்நாதர் ஆலயத்தில் ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இதையொட்டி அதிகாலை முதலே சிறப்பு ஆராதனை, அகண்ட நாம சங்கீர்த்தனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பலராமர், சுபத்ரா, கிருஷ்ணர் ஆகியோர் விசேஷ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
விழாவையொட்டி பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதை வேடமிட்டு கோவிலுக்கு அழைத்து வந்தனர். கிருஷ்ணர், ராதை வேடத்தில் வந்த குழந்தைகள் பக்தர்களின் கவனத்தை ஈர்த்தனர்.