பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர், மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ரூ.18 ஆயிரம் அடிப்படை ஊதியம், காலமுறை ஊதியம், பணி நிரந்தரம், ஓய்வூதியம், ரூ.10 லட்சம் பணிக்கொடை வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்புதல், உணவுச் செலவினத் தொகையை உயர்த்துதல், பதவி உயர்வு, சனிக்கிழமை விடுமுறை, 12 மாத மகப்பேறு விடுப்பு, இ.எஸ்.ஐ. மருத்துவ வசதி உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு கவி தலைமை தாங்கினார். கனகராஜ் முன்னிலை வகித்தார். மாநில குழு உறுப்பினர் சத்யா சிறப்புரையாற்றினார். எஸ்.பாஷா வாழ்த்துரை வழங்கினார். ரேவதி நிறைவுரையாற்றினார். கீதா நன்றி கூறினார். சானவாஸ், குணசேகரன், லூயிஸ் ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.