கோவை, அக்.30: கோயம்புத்தூர் மாநகராட்சியில் சமூக நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் வகையில், விலங்கினப் பிறப்பு கட்டுப்பாடு (ABC) திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மாநகராட்சிப் பகுதியில் சுமார் 1,11,074 சமூக நாய்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ள நிலையில், இதுவரை 47,000 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், வெறிநோய் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது.

2030-ஆம் ஆண்டுக்குள் கோவையை வெறிநோய் இல்லாத நகரமாக உருவாக்கும் இலக்குடன் இப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் அறுவை சிகிச்சை மற்றும் பிந்தைய பராமரிப்புப் பணிகளை மாநகராட்சி கால்நடை மருத்துவ அலுவலர் டாக்டர் வருண்குமார் ஆய்வு செய்தார்.
