கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: தமிழகத்தில் பல்வேறு துறைகளின் தேவைகள் மற்றும் மானியக் கோரிக்கைகளுக்கு ஏற்ப முதலமைச்சர் 110-வது விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
காவல்துறையைப் பொறுத்தவரை சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது, போதைப்பொருள் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
அனைத்து கேள்விகளுக்கும் முதலமைச்சரே பதிலளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கடந்த ஆட்சிக் காலத்திலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருந்தபோது, அமைச்சர் ரகுபதி உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள் சட்டப்பேரவையில் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.