மண்டாடி திரைப்பட பிரமோஷனுக்காக கோவை வந்த நடிகர் சூரி, கதாநாயகி மகிமாவுடன் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், மண்டாடி திரைப்படம் மீனவர்களின் வாழ்க்கை மற்றும் பிரச்சனைகளை பிரதிபலிக்கும் வகையில் உருவாகியுள்ளதாக தெரிவித்தார். ராமநாதபுரம் பகுதியில் நடைபெறும் பாய்மர படகு போட்டியை உலகளவில் அறிமுகப்படுத்தும் படமாக இது இருக்கும் என்றார். மீனவராக நடித்தது தனக்கு கிடைத்த பாக்கியம் என்றும், அவர்களின் வலியை இந்தப் படத்தின் மூலம் புரிந்துகொண்டதாகவும் கூறினார். அரசியலுக்கு வருவது குறித்து தற்போது எதுவும் தெரியாது என தெரிவித்த சூரி, மக்களுக்கு தேவையான படங்களை வழங்க விரும்புவதாக கூறினார். நடிகர் விஜய் இல்லாத சினிமா துறை ஏமாற்றம் அளிப்பதாகவும், அயலான் இயக்குநரின் அடுத்த படத்தில் நடிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.