சென்னை, அக்.14: தமிழகத்தில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில், கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசியை விற்பனை செய்ய அரசு பரிசீலித்து வருகிறது.

தமிழகத்தில் சன்னரக அரிசி விலை கிலோ ரூ.70 முதல் ரூ.80 வரை உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன.

இதையடுத்து, உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் தலைமையில் சென்னையில் நடைபெற்ற விலைக் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில், விலைகளைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தொடர்ந்து, கூட்டுறவு அங்காடிகளில் கிலோ ரூ.40 முதல் ரூ.50-க்குள் விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு லட்சம் டன் அரிசி கிடைப்பது உறுதி செய்யப்பட்டால், குறைந்த விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.