கோவை, அக்.29: கோவை இரத்தினம் கல்விக்குழுமத்தில் புதிய சட்டப்பள்ளி தொடக்க விழா நடைபெற்றது. இதில் தமிழக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பங்கேற்று, சட்டக் கல்வியின் முக்கியத்துவம் குறித்துப் பேசினார்.

இரத்தினம் குழுமத் தலைவரும், இரத்தினம் குளோபல் பல்கலைக்கழக வேந்தருமான முனைவர் மதன் ஆ.செந்தில் தலைமை தாங்கினார். மூத்த வழக்கறிஞர் என்.வி. நாகசுப்பிரமணியம், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ். பாஸ்கர், முன்னாள் பதிவாளர் ஜே.வி. ராஜ், கே.எஸ். ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். பதிவாளர் முனைவர் ச. கிருஷ்ணராஜ் வரவேற்றார். துணைத்தலைவர் முனைவர் ஆர். மாணிக்கம், இயக்குநர் க்ஷிமா செந்தில் ஆகியோர் பங்கேற்றனர்.

ரமணி & சங்கர், கேஎஸ்ஆர் & கோ, சுரானா & சுரானா உள்ளிட்ட சட்ட நிறுவனங்களுடனும், மலேசியாவின் பிரிக்ஃபீல்ட்ஸ் ஆசியா கல்லூரி, HELP பல்கலைக்கழகம் ஆகியவற்றுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து குழு விவாதம் மற்றும் மாதிரி நீதிமன்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
