கோவை: ‘விக்சித் பாரத் இளம் தலைவர்கள் உரையாடல்’ நிகழ்ச்சியில் கோவை இளைஞர்கள் அதிகளவில் பங்கேற்க வேண்டும் என மேரா யுவ பாரத் மாவட்ட இளைஞர் அலுவலர் விக்னேஷ் அழைப்பு விடுத்தார்.
முதற்கட்டமாக ஆன்லைன் வினாடி வினா, தொடர்ந்து கட்டுரை போட்டி, மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகள் நடைபெறும். இறுதியில் டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் வெற்றியாளர்கள் பிரதமருடன் கலந்துரையாட உள்ளனர்.
இதுகுறித்து கல்லூரிகள், பள்ளிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.